Friday, December 7, 2007

பழகலாம் வாங்க !

நண்பர்களே வாருங்கள் பழகலாம் இது நமது இடம்...
தமிழ் மீது உள்ள அளவற்ற காதலால் இந்த பகுதியை தொடங்கினோம்
நான் அறிந்தவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
உங்கள் மேலான கருத்துகளையும் எதிர் நோக்குகிறேன்

"வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்"

ப்ரியமுடன்
முத்து

8 comments:

Lakshmi Dutta said...

Vendam....Valikkuthu

முத்து said...

முதன் முதலாக கமெண்ட் கொடுத்த உங்களுக்கு என் பணிவான நன்றி
தொடரட்டும் உங்கள் பனி......

ப்ரியமுடன்
முத்து

Anonymous said...

Good keep working.

முத்து said...

நன்றி திரு குமணன் அவர்களே

சிம்புட் பறவை said...

ஒரு நடிகனின் பிறந்தநாளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வெட்டி வேலைதான் !
"வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்"
- இது மொழிவெறியின் விளைந்த பழைய பஞ்சாங்கம் .
யாரும் வீழந்து தான் வாழ தமிழ் விரும்புவதில்லை !!

-மனிதன்- (இது ரஜினி பட பெயர் அல்ல !!!)

முத்து said...

நடிகனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அல்ல இது. தவறான உகத்திற்கு வருந்துகிறேன் மக்கள் விரும்பும் ஒருவருக்கு அனுப்பும் வாழ்த்து சேதி....
அது ரஜினியாக இர்ருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி வாழ்த்துவது மனிதன் ((இதுவும் ரஜினி பட பெயர் அல்ல !!!) இயல்பு

மொழிவெறி அல்ல மொழி அர்வம் இது போன்ற பொன் மொழிகள் இல்ல விடேல் தமிழ் இல்லாமல் போய் இருக்கும்
எங்கும் யாரும் தமிழை திணிப்பது இல்லை ஆனால் தமிழுடன் வேறு மொழியை திணிப்பது சகஜமாகி விட்டது உயிர் தமிழ் என்பது எங்கும் இல்லை

வேறு மொழிகள் வேண்டாம் என்று இங்கே யாரும் சொல்வது இல்லை ஆனால் தமிழின் தன்மை கெட கூடாது இதற்காக நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் உங்கள் நினைவில் வரலாம்......

தமிழ் வீழந்து தான் தமிழர்கள் வாழ வேண்டும் என்றும் இல்லை !!

இது போன்ற ஆரோக்கியமான விவாதங்களை வரவேற்கிறோம்

தொடரட்டும் உங்கள் பனி.....

ப்ரியமுடன்
முத்து

சிம்புட் பறவை said...

தமிழில் கணினியில் விரைவாக எழுத நான் இன்னும் பழகவில்லை.
நேரமின்மை என்பதும் ஒரு பொய்யான காரணமாக சொல்லலாம் ...
மொழி குறித்த உங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி..!.நன்றி !!
யாரும் அழிக்கமுடியா ஆழத்தில் தமிழ் மொழி மிக பாதுகாப்பாகவே உள்ளது என்பது
என் தாழ்மையான கருத்து.தமிழ் ஒன்றும் ஓலை சுவடி அல்ல..! கரையான்கள் அரித்துகொள்வதர்க்கு ...மொழி என்பது உணர்வு..இதை தானேதான் உணரவேண்டும்..
சுருங்க சொல்வதென்றால் அரசியல் காரணங்களுக்காக தமிழ் மொழி தாரை வார்க்கப்பட்டு "திடீர்" பாதுகாவலர்களை ஊடகங்கள் உருவாக்கி விட்டன என்பதும்
ஒரு கவலைபடவேண்டிய எண்ணம் ..ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த உங்கள் கருத்து உண்மையிலே என்னை நகைப்புக்குள்ளாகியது. இந்த போராட்டம் இல்லாத
பக்கத்து மாநிலமான கேரளத்தை நோக்கினால் மொழி குறித்த பல உண்மைகள் நன்றாக புரியும்.

நீங்கள் சொன்ன மக்கள் விரும்பும் நபர்கள் பட்டியலில் குமரிமுத்து,தவக்களை,
குண்டு கல்யாணம் போன்ற நடிகர்களையும் இணைத்தல் மகிழ்வு . காரணம், விருப்பம் என்பது எண்ணிக்கை அடிப்படையில் அமைவது அல்ல என்பதை ஏற்றுகொள்வீர்கள் என்று நம்புகிறேன். என்னை பொறுத்தவரை கவனிக்கப்படாத கடிதங்கள் அனுப்பபடுவதில்லை. அது நம் சுயமரியாதை சம்பநதப்பட்டது.

தமிழ் மொழிசிதைவை தவிக்க ஒரே வழி..நல்ல தமிழில் பேசுவோம் .. எழுதுவோம் .. பேசுங்கள்..எழுதுங்கள்...வணிகரீதியான காரணங்களை கண்டுகொள்ளாதீர்கள்...

நன்றி.
-மானுடம் வெல்லும்

முத்து said...

தமிழில் எழுதுவதற்கு என் முதல் பாராட்டுகள் காலதாமதம் பற்றி பரவவில்லை
மொழி என்பது உணர்வு ஏற்றுகொள்கிறேன் ஆனால் இன்று கணினி வளர்ந்து விட்ட களத்தில் மொழி உணர்வு தானே வர வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை
ஆழத்தில் இருக்கு மொழி அப்படியே இருந்து விட கூடாது என்பது தான் என் தாழ்மையான கருத்து ஆழத்தில் இருக்கும் தமிழ் அழகாக தான் உள்ளது ஆனால் அது பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்பது தான் என் ஆவல்


தமிழை வில்த முடியாது கரையன் அறிகாது என்று சும்மா வெறும் வாயை மென்று கொண்டு இருப்பதால் உங்களுக்கும் ஊடகங்கள் உருவக்கிய் "திடீர்" பதுகவலர்களுக்கும் என்ன வித்தியாசம் எதார்த்தம் என்று ஒன்று உள்ளது அல்லவா

எத்தனை தமிழர்கள் தமிழ் நாவல்கள் படிகிறார்கள் எத்தனை தமிழர்கள் தமிழ் நிகழ்ச்சிகளை பர்கிறார்கள் எத்தனை பேருக்கு தமிழ் புடிச்ச பாடம்
எத்தனை பேர்களுக்கு தமிழ் ஆசிரியர்களை பிடிக்கும்


கேரளர்களின் மொழி உணர்வு மதிக்க பட வேண்டியது தான்
அவ்வாறு நம் மக்கள் மொழி உணர்வும் இருந்திருந்தால் ஹிந்தி எதிர்ப்பு தேவை இல்லை தான் புண் இருந்தால் தான் மருந்தின் அவசியம் தேவை

மக்கள் விரும்பும் நபர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அமைவது அல்ல என்பதை
ஏற்று கொள்கிறேன் மக்கள் நினைவில் உள்ளவர்கள் என்று வைத்து கொலலமா ?

உண்மையை சொல்லுகிறேன் குமரிமுத்து,தவக்களை,
குண்டு கல்யாணம் என் நினைவில் இல்லை அது என் தவறும் அல்ல
சுருங்க சொல்வதென்றால் அவர்கள் என்னை கவர தவறி விட்டார்கள்

முடிவாக உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்

தமிழ் மொழிசிதைவை தவிக்க ஒரே வழி..நல்ல தமிழில் பேசுவோம் .. எழுதுவோம் .. பேசுங்கள்..எழுதுங்கள்...

இதில் என் கருத்தாக

தமிழை பரப்புங்கள் தெரியாதவர்களுக்கு அதை தெரியப்படுத்துங்கள்

நன்றி..

-நிச்சயம் மானுடம் வெல்லும் பகிர்ந்து உண்ணும் உணர்வு இருந்தால்