Monday, December 31, 2007

விழ விழ எழுவேன்-நண்பர் ராஜா அவர்களின் புத்தாண்டு கவிதை

உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து எப்பிடி சொல்வது என்று யோசித்து கொண்டு இருந்தேன் வாழ்த்து அனுப்புவது எல்லோரும் செய்கின்றனர் நம எதாவது வித்தியாசமா...... சரி கவிதை எழுதலாமே ஆனா நாம கவிதை எழுதின யார் படிகற்து முதல தமிழை ஒழுங்க எழுதுட என்று நிங்கள் சொல்வது கேட்கிறது

அந்த நேரத்தில் நண்பர் திரு ராஜா அவர்களிடம் இருந்து வந்த ஒரு கவிதை என்னை வெகுவாக கவர்ந்தது ஆம் நிச்சயம் இது கவர கூடிய கவிதை தான்

என்னை கவர்ந்த அந்த கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
இந்த கவிதை பலகாலம் வாங்க தொகுப்பில் இடம் பெற திரு ராஜா அவர்கள் விருப்பம் தெரிவித்தது மிக்க மகிழ்ச்சி

இதோ அந்த கவிதை நண்பர் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துகளுடன்.....

விழுந்தேன் !

இலவச வண்ணங்களில்
நிறமிழந்து நின்றது
தேசம் !

வன்முறை வெளிச்சத்தில்
மனிதம் மறந்தது
உலகம் !

சிவப்பு சிந்தனையில் கூட
இரத்த துளிகள்....!
வங்கத்தில் நிறக்குருடா..?

இனி எழும்
திசையின் குழப்பத்தில்
கதிரவன்..

விழித்தேன்..!!

இன்னமும் கொப்பளித்தது
இட ஒதுக்கீட்டுக் கோபம்..!

பாலைவனக் கவலைகளில்
அவசரப்பட்டு
மூச்சு வாங்கிய
முடி மன்னர்கள்..!!
தலையை தடவிக் கொண்டேன்

இலக்கண பிழையில்
எட்டாமல் போன
முதற்காதல்..!

நிமிர்ந்தேன்..

உயிரின் அகரத்தில்
குறிலும் நெடிலுமாய்
என் மக்கள்..
மழலையின் சிரிப்பில்
இளமையை கண்டேன்..

சிரித்தேன்..

சந்தையில்
வாங்கிய வெங்காயம்
தாமதத்தால்
முளைக்கத் தொடங்கியது.

புதுப்பிக்க வேண்டிய
அட்டைகள் எல்லாம்
அஃறிணை மறந்து
அழத் தொடங்கின

எப்போதும்போல
திமிருடன் பயணிக்க
தன்னம்பிக்கை மட்டும்
தயாரானது..
இருதயம் பற்றிகொண்டு..

கொஞ்சமும் குழப்பமில்லாமல்
சூரியன் சுற்ற தொடங்கியது...

எழுந்தேன்...

ஆம் ..நான் விழ விழ எழுவேன்..

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..

நன்றி.

செ.ஆயிரம் ராஜா.

Thursday, December 27, 2007

உங்கள் புகைப்படங்களை மாற்றம் செய்ய











இந்த இரு படங்களுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு தெரிகிறது என்று நினைகிறேன் முதலாவது படத்தில் இருந்து இரண்டாவது படம் சில மாற்றம் செய்ய பட்டுள்ளது
நான் இந்த மாற்றங்களை ஒரு online போட்டோ எடிட்டர் முலம் செய்தேன்
photoshop software உபயோகப்படுத்தும் வாய்ப்பு இல்லாதவர்கள் தங்கள் விருப்பான போடோகளை கிழே உள்ள இணையத்தளம் முலம் ஆன்லைனில் உங்கள் ப்த்டோவை எடிட் செய்து பல எபிபிக்ட்ஸ் தனை கொடுத்து கொள்லாம்

http://www.picnik.com/
http://fotoflexer.com/

இனி என்ன உங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் போடோகளை நின்கலே மாற்றம் செயலமே !

இனி நிங்களும் தமிழில் எழுதலாம் !

என்னங்க என்னை போல நிங்களும் தமிழில் எழுத வேண்டுமா ?

தமிழில் எழுதுவதற்கு நிறைய online tools உண்டு இதில் சிலது பணம் கொடுத்து வாங்க வேண்டி இறக்கும் சிலது இலவசமாக கிடைக்கும்

நான் உபயோகபடுத்துவது ஒரு இலவச எடிட்டர்

இது உபயோகபடுத்துவது மிக எளிது என் தமிழ் எழுத்துக்களை கொண்டு வரும் online எடிட்டர் கூகிள் தயாரிப்பு கிழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

http://www.google.com/transliterate/indic/Tamil#

microsoft internet explorer சிறந்தது firefox இல் எழுத்துக்கள் சரியான வடிவம் பெறுவதில்லை

இனி என்ன நண்பர்களே நிங்களும் தமிழில் எழுதலாம் !

Thursday, December 20, 2007

படம் சொல்லும் சேதி



Dec 21 2007


டிசம்பர் 7 1941 காலை 7:55 மணிக்கு அமெரிக்காவின் pearl harbor ஐ தாக்கியது ஜப்பான் அமெரிக்க படைகளை இரண்டாம் உலக போருக்கு இழுத்து வந்தது இந்த நிகழ்ச்சி தான் வெறும் இரண்டு மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் அமெரிக்காவின் 188 விமானங்கள் அழிக்கப்பட்டன சுமார் 2400 பேர் கொள்ள பட்டனர்

நண்பர் அசினிடம் எதிர்பார்த்தது என்ன ?

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எங்கள் அலுவலகத்தில் magic show நடத்த பட்டது magic செய்பவர் கூட்டத்தில் இருந்த ஒரு நண்பரை அழைத்து ஒரு கைகுடையை எடுத்து துணிய்னால் செய்யப்பட்ட ஒரு பை உள் போட சொன்னார் அப்புறம் அவனிடம் பிடித்த நடிகையின் பெயரை கேட்டார் அவரும் ஆனந்தமாக அசின் என்று சொன்னார் பின் அசினிடம் இருந்து என்ன வேண்டும் என்று கேடதற்கு அவர் விழித்தார் சரி என்ன எதிர்பர்திர்கள் என்று பார்த்து விடுவோமே என்று எதோ மந்திரத்தை சொன்னார் சிறேது நேரத்தில் கைக்குட்டை பிராவாக மாறியது அந்த நண்பர் திரு திரு என்று விழிததை பர்கணுமே

வேடிக்கை வீநோதங்கள் தானே பண்டிகைகளின் சிறப்பு !

Tuesday, December 18, 2007

எனேமி அட் தி கேட்ஸ் (enemy at the gates)





பொழுதுபோகமல் பார்க்க நேரிட்ட படம் ஆம் நிச்சயம் பொழுது போனது தெரியவில்லை இது ஒரு பழய ஆங்கில படம்

ஜெர்மன் ரஷ்ய இரண்டுக்கும் நடந்த இரண்டாம் உலக போரின் ஒரு பகுதி தான் கதை ராணுவ வீரர்களையும் பொதுமக்களையும் சுமந்து கொண்டு வரும் ரயிலில் இருந்து ஆரம்பிக்கிறது கதை வசிலி சைத்செவ் இவர் தன் இந்த கதையின் ஹீரோ
ரயில் பொதுமக்கள் அனைவரையும் இறக்கி விட்டு விட்டு ராணுவ வீரர்களை ஏற்றி கொண்டு போர் நடக்கும் stalingaurd நகருக்கு புறப்படுகிறது

அங்கே நம்ம ஹீரோ அந்த ரயிலில் இருந்து இறக்கி விடும் பெண்களில் ஒருவர் அவரை கவர்கிறார் போர் கவனத்தில் அதை தவிர்த்து போருக்கு செல்கிறார்
ரயில் இலக்கத்தை அடைகிறது அங்கிருந்து படகுகளில் பயணம் செய்து stalingaurd நகரத்தை அடையவேண்டும் ஆனால் அவர்கள் போகும் போதே போர் நடந்து கொண்டு இருந்தது படகில் ஏறமறுத்த வீரர்களை அடித்து ஏறவைகின்றனர் அதிகாரிகள். பலரது உயிர்கள் ஜெர்மன் குண்டுகளுக்கு பலியாக எஞ்சியவர் கரை சேருகின்றனர் இரண்டு பேருக்கு ஒரு துப்பாக்கி விதம் கொடுத்து போருக்கு அனுப்ப படுகின்றனர் நமது ஹீரோ வுக்கு துப்பாக்கி குண்டுகள் மட்டும் கிடைக்கின்றனர் " எனக்கு ஒரு துப்பாக்கி வேண்டும்" என்று வெறியோடு வெறும் கைகளோடு போர்களத்தில் ஓடுகிறான் ஆனால் ஜெர்மன் படை தாக்குதலில் ரஷ்ய படை பின்வங்குகிறது போரிட முடியாமல் திரும்பி ஓடி வரும் வீரர்களை ரஷ்ய படை கொள்கிறது எந்த பக்கமும் போக முடியாமல் வீரர்கள் உயர் விடுகின்றனர்

பிணத்திற்கு நடுவே நமது ஹீரோ பதுங்கி கொள்கிறான் அப்போது தன் கவனிக்கிறான் அந்த பிணத்திற்கு நடுவே மற்றொருவன் உயரோடு இருப்பதை ரஷ்ய ராணுவத்தை சேர்ந்த அவன் ஜெர்மன் படை தலைவனை துப்பாக்கி கொண்டு குறி வைக்கிறான் எதோ யோசித்தவன் அந்த பொறுப்பை நாம ஹீரோ விடம் கொடுகிறான்
துப்பாக்கி கிடைத்த பெருமிதத்தில் குறி தவறாமல் ஜெர்மன் படை தலைவனை சுட்டு வில்துகிறான் நம்ம ஹீரோ

துப்பாக்கி கொடுத்தவன் ரஷ்ய ராணுவத்தில் பெரிய பொறுப்பில் உள்ளவன் உடனே ஹீரோவை பதவி உயர்வு கொடுத்து மிகிய பொறுப்பை கொடுகிறான்

வேட்டைக்காரன் ஆனா நம்ம ஹீரோ குறி தவறாமல் ஜெர்மன் தலைகளை சுட்டு வில்துகிறான் பாராட்டுகள் குவிகின்றன ஜெர்மன் படைகளுக்கு பெரும் தலைவலியை தருகிறான் இவனை வெல்ல ஒரு சிறந்த துப்பாக்கி சுடும் வீரரை அனுப்புகிறது ஜெர்மன்
இவர்கள் இடையே நடக்கும் போர் தான் மீதி கதை இதன் இடையே அவனுக்கு பதவி கொடுத்தவன் நண்பன் ஆகிறான்....அதே நேரத்தில் அவன் ரயிலில் பார்த்த பெண்ணை திரும்ப பார்க்க நேரிடுகிறது.....ஆனால் அவளை அவன் நண்பன் விரும்புகிறான் என்ற உண்மையும் தெரிய வருகிறது

யாருடைய காதல் ஜெய்க்கும் ? போரில் யர்ர் வெற்றி பெறுவர் ?

இதை தெரிந்து கொள்ள 2001 ஆம் ஆண்டு வெளியான "எனீமி அட் தி கேட்ஸ் " பாருங்கள்.....

உண்மையில் மிக அருமையான படம்.... பார்க்க வேண்டிய படம்

இதை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி

ப்ரியமுடன்
முத்து

சேமிப்பு தந்த வாழ்க்கை இது - திரு ரமேஷ்குமார் ராதாகிருஷ்ணன்

எங்கள் அலுவலக நண்பர் திரு ரமேஷ் அவர்களின் பேட்டி நாணய விகடனில்
வெளிவந்துள்ளது.மிக சிறப்பான கட்டுரை உங்கள் பார்வைக்கு
எங்களால் கேப்டன் என்று அழைக்கப்படும் இவர் பெரியவர் சிறியவர் என்று பாகுபாடு இல்லாமல் அன்பு செலுத்த கூடியவர் வயது ஆக ஆக இளமை கூடும் மனிதர்

இந்த தொகுப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதில் பெருமிதம் அடைகிறேன்

ப்ரியமுடன்
முத்து


Sunday, December 16, 2007

பெற்றோரை கைவிடுபவர்களுக்கு சிறை

பெற்றோரை கைவிடுபவர்களுக்கு 3 மாத சிறை மற்றும் 5 ஆயிரம் அபராதம்
என்ன கொடுமை சார் பெற்றோரை பாதுகாக்க கூட சட்டம் போட வேண்டி உள்ளது
கடமையை செய்ய சட்டமா ?

ப்ரியமுடன்
முத்து

Thursday, December 13, 2007

இன்றைய புகைப்படம் ( மின்னல் வெட்டு )





வலை தேடல் செய்து கொண்டிருக்கும் போது கிடைத்த அறிய புகைப்படம்
மின்னல் வெட்டு இது
இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்

ப்ரியமுடன்
முத்து

தங்க கோயில்


தங்க கோயில்



இது வெளிநாட்டில் அல்ல நமது தமிழ்நாட்டில் வேலூர் அருகே உள்ள ஸ்ரிபுரம்
சென்னையில் இருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது

இதை பார்த்ததும் எனக்கு ஒன்று தோன்றுகிறது இந்தியா உண்மையில் ஒரு ஏழை நாடா ?

இங்கே உணவிற்கும் பணத்திற்கும் மக்கள் பந்தாட படும் நிலை
இதில் இந்த தங்க கோயில் தேவையா ?

ப்ரியமுடன்
முத்து

Tuesday, December 11, 2007

இந்த மாத நட்சத்திரம்


நாளை பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

Friday, December 7, 2007

ஒன்பது ரூபாய் நோட்டு ( இது ஒரு அறிய நோட்டு )

மந்தமான வேலை நேரத்தில் நண்பர் கோபி அவர்களிடம் இருந்து வந்த மினஞ்சல்
இது ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படம் பற்றியது
இமேஜ் இல்லாத ஒரு திரைப்படம் ஏன் மக்களால் ஏற்று கொள்ள படவில்லை
ஏற்று கொள்ள படாதது வேதனையே
சதையை நம்பும் இயக்குனர்கள் ஏன் கதையை நம்புவதில்லை

காரணம் இது போன்ற கதை அம்சம் கொண்ட கதைகளை நம் விரும்புவது இல்லை
நல்ல படைப்புகளை நாம் ஆதரிக்க தான் வேண்டும். நண்பர் கோபி அனுப்பிய மினஞ்சல் இதோ உங்களுக்காக அதரவு தாரீர்

ப்ரியமுடன்
முத்து


மக்களுக்காக ஒன்பது ரூபாய் நோட்டு!
தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒன்பது ரூபாய் நோட்டு படத்தை தமிழகம் முழுவதும் 100 தியேட்டர்களில் மக்களுக்காக சலுகை கட்டணத்தில் திரையிடவுள்ளது பிரமீட் சாய்மீரா நிறுவனம். படத்தைப் பார்த்து விட்டு தங்களுக்கு இஷ்டமான தொகையை வெளியில் வைத்துள்ள உண்டியலில் போடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கர்பச்சான் இயக்கத்தில், சத்யராஜ், நாசர், அர்ச்சனா, ரோகினி ஆகியோரின் பண்பட்ட நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஒன்பது ரூபாய் நோட்டு. திரைப்பட விமர்சகர்களாலும், நல்ல சினிமாவை விரும்புபவர்களாலும் இப்படம் வெகுவாக வரவேற்கப்பட்டு, பாராட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக வித்தியாசமான முறையில் ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தை மக்களிடம் கொண்டு போகவுள்ளனர்.

அதன்படி வருகிற ஞாயிற்றுக்கிழமை (9ம் தேதி), முற்பகல் 11.30 மணிக்கு தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படும். இப்படத்தை பொதுமக்கள் எந்தவிதக் கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்தாமல் பார்க்கலாம். பார்த்த பின்னர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் தங்களுக்கு விருப்பமான தொகையை செலுத்தலாம்.

இதற்கான ஏற்பாடுகளை பிரமீட் சாய்மீரா நிறுவனம் செய்கிறது. இதற்கான காரணம் மனதை வேதனைப்படுத்துவதாகும். கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் திரைக்கு வந்தது. ஆனால் நல்ல தியேட்டர்கள் கிடைக்காததால் தமிழகம் முழுவதும் மிகக் குறைந்த தியேட்டர்களிலேயே (30 தியேட்டர்கள்தானாம்) திரையிட முடிந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் உள்ள மெகா மால் என கூறப்படும் மல்ட்பிளக்ஸ் தியேட்டர்காரர்கள் இந்தப் படத்தை திரையிட ரொம்பவே தயங்கினார்களாம். அதிலும் ஒரு தியேட்டர் நிர்வாகம், வேட்டி கட்டியவர்களுக்கான தியேட்டர் இது கிடையாது. எனவே இந்தப் படத்தை திரையிட முடியாது என்று அகம்பாவமாக கூறி விட்டதாம்.

இதனால் தங்கர் கொதித்துப் போனார். தமிழர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும், நட்பின் மாண்பை விளக்கும் இதுபோன்ற நல்ல படத்தைப் தமிழ் மக்கள் பார்க்க இப்படிப்பட்ட புல்லுறுவிகளால் தடை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக போராட்டத்தில் குதிக்கவும் தயாரானார்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களை பிரமீட் சாய்மீரா நிறுவனம்தான் கட்டுப்படுத்தி வருகிறது. தங்கரின் போராட்ட முடிவு குறித்து அறிந்ததும், சாய் மீரா நிறுவனம், ஒன்பது ரூபாய் நோட்டுப் படத்தின் சிறப்புக் காட்சியை தங்களது கட்டுப்பாட்டில் உள்ள 100 தியேட்டர்களில் ஒரு காட்சி திரையிட முன்வந்தது.

இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் கூறுகையில், இந்தப் படத்தை இலவசமாக திரையிடவில்லை. முதலில் மக்கள் படத்தைப் பார்க்க வேண்டும். ஒரு பைசா கூட கொடுக்காமல் படத்தைப் பார்த்து விட்டு, தங்களுக்கு விருப்பமான தொகையை கட்டணமாக செலுத்தலாம்.

இந்தக் கட்டணம் முழுவதும் எங்களுக்கு போகாது, மாறாக தயாரிப்பாளரிடம்தான் வழங்கப்படும்.

நல்ல சினிமாவை நாங்கள் விரும்புகிறோம், ஆதரிக்கிறோம். ஒரு நல்ல படத்தைக் கொடுத்ததற்காக ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் தயாரிப்பாளர் நஷ்டப்பட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்தத் திட்டத்தை அமல்படுத்துகிறோம்.

ஒன்பது ரூபாய் நோட்டு மிகவும் அருமையான படம். கடந்த 75 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு மைல் கல் படம். இந்தப் படத்தை நாங்கள் பாராட்டியே ஆக வேண்டும். தங்கர் போன்ற படைப்பாளிகளை சிறப்பித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என்றார்.

இந்தப் படத்திற்கான இலவச புக்கிங் வசதியையும் சாய் மீரா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தக் காட்சிக்கான இலவச டிக்கெட் வேண்டுவோர் 044-46464646 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாமாம் என்றார் சுவாமிநாதன்.

முன்பு 70களில் எழுத்தாளர் ஜெயகாந்தன் இயக்கத்தில் உருவான உன்னைப் போல ஒருவன் படத்தைத் திரையிடவும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் மக்களுக்கு நேரடியாக இப்படத்தைத் திரையிட்டார். அதன் பின்னர் மக்களிடம் கிடைத்த ஆதரவைப் பார்த்த தியேட்டர் உரிமையாளர்கள் இப்படத்ைத விரும்பி வாங்கி திரையிட்டனர். படமும் சில்வர் ஜூப்ளியைக் கொண்டாடியது என்பது நினைவிருக்கலாம்.

எத்தனையோ குப்பைப் படங்களைக் கோடிகளைக் கொட்டி வாங்கிக் காட்டும் தியேட்டர்காரர்கள், இதுபோன்ற பாடங்களை மக்களிடம் கொண்டு போகத் தயங்குவது ஏன் என்று புரியவில்லை.

தமிழர்களுக்காக, தமிழனால் எடுக்கப்பட்ட ஒரு படத்தை திரையிட தமிழகத்தில் தியேட்டர் இல்லை என்பது ஒவ்வொரு தமிழனும் வெட்கித் தலை குணிய வேண்டிய விஷயம்.

பழகலாம் வாங்க !

நண்பர்களே வாருங்கள் பழகலாம் இது நமது இடம்...
தமிழ் மீது உள்ள அளவற்ற காதலால் இந்த பகுதியை தொடங்கினோம்
நான் அறிந்தவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
உங்கள் மேலான கருத்துகளையும் எதிர் நோக்குகிறேன்

"வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்"

ப்ரியமுடன்
முத்து