Tuesday, December 18, 2007

எனேமி அட் தி கேட்ஸ் (enemy at the gates)





பொழுதுபோகமல் பார்க்க நேரிட்ட படம் ஆம் நிச்சயம் பொழுது போனது தெரியவில்லை இது ஒரு பழய ஆங்கில படம்

ஜெர்மன் ரஷ்ய இரண்டுக்கும் நடந்த இரண்டாம் உலக போரின் ஒரு பகுதி தான் கதை ராணுவ வீரர்களையும் பொதுமக்களையும் சுமந்து கொண்டு வரும் ரயிலில் இருந்து ஆரம்பிக்கிறது கதை வசிலி சைத்செவ் இவர் தன் இந்த கதையின் ஹீரோ
ரயில் பொதுமக்கள் அனைவரையும் இறக்கி விட்டு விட்டு ராணுவ வீரர்களை ஏற்றி கொண்டு போர் நடக்கும் stalingaurd நகருக்கு புறப்படுகிறது

அங்கே நம்ம ஹீரோ அந்த ரயிலில் இருந்து இறக்கி விடும் பெண்களில் ஒருவர் அவரை கவர்கிறார் போர் கவனத்தில் அதை தவிர்த்து போருக்கு செல்கிறார்
ரயில் இலக்கத்தை அடைகிறது அங்கிருந்து படகுகளில் பயணம் செய்து stalingaurd நகரத்தை அடையவேண்டும் ஆனால் அவர்கள் போகும் போதே போர் நடந்து கொண்டு இருந்தது படகில் ஏறமறுத்த வீரர்களை அடித்து ஏறவைகின்றனர் அதிகாரிகள். பலரது உயிர்கள் ஜெர்மன் குண்டுகளுக்கு பலியாக எஞ்சியவர் கரை சேருகின்றனர் இரண்டு பேருக்கு ஒரு துப்பாக்கி விதம் கொடுத்து போருக்கு அனுப்ப படுகின்றனர் நமது ஹீரோ வுக்கு துப்பாக்கி குண்டுகள் மட்டும் கிடைக்கின்றனர் " எனக்கு ஒரு துப்பாக்கி வேண்டும்" என்று வெறியோடு வெறும் கைகளோடு போர்களத்தில் ஓடுகிறான் ஆனால் ஜெர்மன் படை தாக்குதலில் ரஷ்ய படை பின்வங்குகிறது போரிட முடியாமல் திரும்பி ஓடி வரும் வீரர்களை ரஷ்ய படை கொள்கிறது எந்த பக்கமும் போக முடியாமல் வீரர்கள் உயர் விடுகின்றனர்

பிணத்திற்கு நடுவே நமது ஹீரோ பதுங்கி கொள்கிறான் அப்போது தன் கவனிக்கிறான் அந்த பிணத்திற்கு நடுவே மற்றொருவன் உயரோடு இருப்பதை ரஷ்ய ராணுவத்தை சேர்ந்த அவன் ஜெர்மன் படை தலைவனை துப்பாக்கி கொண்டு குறி வைக்கிறான் எதோ யோசித்தவன் அந்த பொறுப்பை நாம ஹீரோ விடம் கொடுகிறான்
துப்பாக்கி கிடைத்த பெருமிதத்தில் குறி தவறாமல் ஜெர்மன் படை தலைவனை சுட்டு வில்துகிறான் நம்ம ஹீரோ

துப்பாக்கி கொடுத்தவன் ரஷ்ய ராணுவத்தில் பெரிய பொறுப்பில் உள்ளவன் உடனே ஹீரோவை பதவி உயர்வு கொடுத்து மிகிய பொறுப்பை கொடுகிறான்

வேட்டைக்காரன் ஆனா நம்ம ஹீரோ குறி தவறாமல் ஜெர்மன் தலைகளை சுட்டு வில்துகிறான் பாராட்டுகள் குவிகின்றன ஜெர்மன் படைகளுக்கு பெரும் தலைவலியை தருகிறான் இவனை வெல்ல ஒரு சிறந்த துப்பாக்கி சுடும் வீரரை அனுப்புகிறது ஜெர்மன்
இவர்கள் இடையே நடக்கும் போர் தான் மீதி கதை இதன் இடையே அவனுக்கு பதவி கொடுத்தவன் நண்பன் ஆகிறான்....அதே நேரத்தில் அவன் ரயிலில் பார்த்த பெண்ணை திரும்ப பார்க்க நேரிடுகிறது.....ஆனால் அவளை அவன் நண்பன் விரும்புகிறான் என்ற உண்மையும் தெரிய வருகிறது

யாருடைய காதல் ஜெய்க்கும் ? போரில் யர்ர் வெற்றி பெறுவர் ?

இதை தெரிந்து கொள்ள 2001 ஆம் ஆண்டு வெளியான "எனீமி அட் தி கேட்ஸ் " பாருங்கள்.....

உண்மையில் மிக அருமையான படம்.... பார்க்க வேண்டிய படம்

இதை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி

ப்ரியமுடன்
முத்து

No comments: