Monday, December 31, 2007

விழ விழ எழுவேன்-நண்பர் ராஜா அவர்களின் புத்தாண்டு கவிதை

உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து எப்பிடி சொல்வது என்று யோசித்து கொண்டு இருந்தேன் வாழ்த்து அனுப்புவது எல்லோரும் செய்கின்றனர் நம எதாவது வித்தியாசமா...... சரி கவிதை எழுதலாமே ஆனா நாம கவிதை எழுதின யார் படிகற்து முதல தமிழை ஒழுங்க எழுதுட என்று நிங்கள் சொல்வது கேட்கிறது

அந்த நேரத்தில் நண்பர் திரு ராஜா அவர்களிடம் இருந்து வந்த ஒரு கவிதை என்னை வெகுவாக கவர்ந்தது ஆம் நிச்சயம் இது கவர கூடிய கவிதை தான்

என்னை கவர்ந்த அந்த கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
இந்த கவிதை பலகாலம் வாங்க தொகுப்பில் இடம் பெற திரு ராஜா அவர்கள் விருப்பம் தெரிவித்தது மிக்க மகிழ்ச்சி

இதோ அந்த கவிதை நண்பர் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துகளுடன்.....

விழுந்தேன் !

இலவச வண்ணங்களில்
நிறமிழந்து நின்றது
தேசம் !

வன்முறை வெளிச்சத்தில்
மனிதம் மறந்தது
உலகம் !

சிவப்பு சிந்தனையில் கூட
இரத்த துளிகள்....!
வங்கத்தில் நிறக்குருடா..?

இனி எழும்
திசையின் குழப்பத்தில்
கதிரவன்..

விழித்தேன்..!!

இன்னமும் கொப்பளித்தது
இட ஒதுக்கீட்டுக் கோபம்..!

பாலைவனக் கவலைகளில்
அவசரப்பட்டு
மூச்சு வாங்கிய
முடி மன்னர்கள்..!!
தலையை தடவிக் கொண்டேன்

இலக்கண பிழையில்
எட்டாமல் போன
முதற்காதல்..!

நிமிர்ந்தேன்..

உயிரின் அகரத்தில்
குறிலும் நெடிலுமாய்
என் மக்கள்..
மழலையின் சிரிப்பில்
இளமையை கண்டேன்..

சிரித்தேன்..

சந்தையில்
வாங்கிய வெங்காயம்
தாமதத்தால்
முளைக்கத் தொடங்கியது.

புதுப்பிக்க வேண்டிய
அட்டைகள் எல்லாம்
அஃறிணை மறந்து
அழத் தொடங்கின

எப்போதும்போல
திமிருடன் பயணிக்க
தன்னம்பிக்கை மட்டும்
தயாரானது..
இருதயம் பற்றிகொண்டு..

கொஞ்சமும் குழப்பமில்லாமல்
சூரியன் சுற்ற தொடங்கியது...

எழுந்தேன்...

ஆம் ..நான் விழ விழ எழுவேன்..

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..

நன்றி.

செ.ஆயிரம் ராஜா.

No comments: