Thursday, January 3, 2008

நானும் ஒரு ஜடம்

நானும் ஒரு ஜடம்

அரிசிச்சோற்றுக்கு

ஆலாய்ப் பறக்கும்

மானிடர்களுக்கு மத்தியில்

நானும் ஒரு ஜடம்


அலை அலையை அசைந்தாடும்

ஊதுவத்திபுகையினுள்

அழிக்க முடியாத - ஓவியமாய்

நானும் ஒரு ஜடம்


வானவில் தன் வழியெங்கும்

வாரியிரைத்துவிட்டு போன

வண்ணக்கலவயினுள்

வழித்தெடுக்க முடியாத ஒரு - நிறமாய்

நானும் ஒரு ஜடம்


சின்னக் குழந்தையின்

வேடிக்கைகளின் நடுவே சிதறிக்கிடக்கும்

விளையாட்டுப் பொருட்களில் - ஒன்றாய்

நானும் ஒரு ஜடம்


வட்ட வட்டமாய் பின்னப்பட்ட

சிலந்தி வலையினுள்

சிக்கிக்கொண்டசிறு உயிராய்

நானும் ஒரு ஜடம்


வறுமையும் ஊனமும்

கண்ணெதிரே கடக்கும் போது

கை கொடுத்து உதவ முடியாமல்

கடவுளிடம் மட்டுமே முறையிடுகின்ர

கலிகாலத்து மனிதர்களில் ஒன்றாய்

நானும் ஒரு ஜடம்

உங்கள்
கோபிநாத்

2 comments:

Anonymous said...

"நானும் ஒரு ஜடம்"

"ITHU OORU ARINCHA VISAYAM....ITHUKKU ETHUKKU BLOGSPOT?????DUCKLUS

Anonymous said...

நிங்கள் அறிந்த விசயமாக இருக்கலாம் ஆனால் நம் நாட்டில் அறியாமை இருப்பதும் நிங்கள் அறிந்த விஷயம் தானே !